சினிமா

சிவகார்த்திகேயனின் படத்தில் முக்கிய வேடத்தில் ஆக்ஷன் கிங்

சிவகார்த்திகேயனின் அடு்த்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இதனையடுத்து இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கேஜேஆர் நிறுவனம் தயாரிப்பில், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் “ஹீரோ” என்ற படத்தில் சிவகார்த்திகேயனும் அவருக்க ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடிக்கவுள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க