1983 ஆம் ஆண்டு காலத்திலே வாஸ் குணவரத்தன என்ற அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டு வீசப்பட்ட காரணத்தினால் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்த கால்துறையினருக்கு ஒரு வாரம் விடுமுறையளித்திருந்தது.
அதுபோல் தெற்கிலும் கடைகளுக்கு தீவைத்தனர், பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற ஒரு குழுவும் வடக்கில் கடைகளுக்குத் தீவைத்துக் கொழுத்தியது.
இந்த சூழ்நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவானார்கள்.
மகிந்த ராஜபக்சதான் யுத்தத்தை நிறைவு செய்தார்.
ஆகவே அவருக்கு வாக்குகளை வழங்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இப்பகுதி மக்களிடம் சில கருத்துக்களை விதைத்துள்ளார்கள்.
அதனால்தான் இப்பகுதி மக்கள் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டிலும் அமுனுகம மட்டக்களப்பு களுவாஞ்சிடியில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப்போல் தற்போதைய இளைஞர்யுவதிகள் முட்டாள்கள் இல்லை தற்போதைய இளைஞர்யுவதிகள் நன்கு சிந்தித்துச் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாவர்.
தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர் யுவதிகள் தமது அறிவுகளைப் பெருக்கிக் கொள்கின்றார்கள்.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அவர்கள் தேர்தல்களில் நிற்கும்போது, அதிகளவு மக்கள் இப்பகுதியில் வாக்குகளை அவருக்கு வழங்கவில்லை என்பது எமக்கு நன்கு தெரியும்.
மகிந்த ராஜபக்சதான் யுத்தத்தை நிறைவு செய்தார் ஆகவே அவருக்கு வாக்குகளை வழங்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இப்பகுதி மக்களிடம் சில கருத்துக்களை விதைத்துள்ளார்கள்.
அதன்காரணமாக ரணில் விக்கிரம சிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் கூறியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு இப்பகுதி மக்கள் குறைவாக வாக்களித்திருந்தாலும், அவர் இப்பகுதி மக்களுக்கு குறைவான அளவு வேலை செய்யவில்லை.
யுத்தம் நிறைவு பெற்றாலும் அப்பகுதி மக்களிடத்தில் வேதனைகள் இருக்கும் அதனால்தான் அவர்கள் எமக்கு வாக்களித்தது குறைவாக்க இருக்கும் எனினும் அவர்கள் எமது சகோதரர்கள் அவர்களுக்கு நாம் பணிபுரிய வேண்டும் என மகிந்த ராஜபச்ச தெரிவித்திருந்தார் என்றும் டிலும் அமுனுகம குறிப்பிட்டார்
கருத்து தெரிவிக்க