உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி வெற்றி – விடைபெற்றார் மாலிங்க! ஜனாதிபதியும் களத்தில்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 314  ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஒரு நாள் போட்டிக்கு விடைகொடுக்கும் மலிங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு பிரேமதாஸ மைதானத்துக்கு வந்திருந்தார்.

விளையாட்டுதுறை அமைச்சர் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

கருத்து தெரிவிக்க