வெளிநாட்டு செய்திகள்

நோய் தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்கிறது பாகிஸ்தான் !

இந்தியாவிடம் இருந்து கடந்த 16 மாதங்களில் 250 கோடி (இந்திய ரூபாய்) மதிப்புள்ள ரேபிஸ் எதிர்ப்பு மருந்துகளையும், நச்சு எதிர்ப்பு மருந்துகளையும் பாகிஸ்தான் இறக்குமதி செய்து வந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பிரபல நேஷன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார சேவை அமைச்சு, பாகிஸ்தானின் செனட் நிலைக் குழுவின் முன் தாக்கல்  செய்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. செனட் உறுப்பினர் ரஹ்மான் மாலிக். இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளின் விபரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, தேசிய சுகாதார சேவை அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுடனான உறவு மோசமான நிலையில் இருந்த போதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து மருந்துகளை இறக்குமதி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க