முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் மீது சட்டமா அதிபர் விசேட உயர்நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக கட்டுமானத்தின் மூலம் ரூ .33.9 மில்லியன் மதிப்புள்ள அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை விசேட உயர் நீதிமன்றம் விசாரிப்பதில் இருந்து இடைநீக்கம் செய்து நேற்று (ஜூலை 26), உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை இன்று அரசு தரப்பு முறையாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
நீதிமன்ற அமர்வின் போது, சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்ட ஐந்தாவது குற்றச்சாட்டை நீக்கி திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, திருத்தம் தொடர்பாக ஓகஸ்ட் 30 ஆம் திகதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீதிபதிகள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்து தெரிவிக்க