உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நியமனம் வழங்களில் வெளிவாரி பட்டதாரிகளுக்கு அநீதி’

பட்டதாரி பயிலுர் நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியின் செயலாளரும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளருமாகிய சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று அரச தொழிலுக்காக காத்திருந்தவர்கள் இந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு காரணமாக மனமுடைந்துள்னர்.

ஆகவே இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என நோக்கப்படுகின்றது .

வெளிவாரி ரீதியாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் அரச நியமனங்கள் வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சும் நாட்டின் நிர்வாகத்தை கொண்ட நடத்துகின்ற தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க