ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (24) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.
அத்துடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கும் கோருவதற்கு எடுத்த முடிவு தொடர்பில் இதன்போது செயற்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி கைவிடாத பட்சத்தில் அடுத்து எவ்வாறான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அதேவேளை, எஸ்.பி. திஸாநாயக்கவிடமிருந்து பொருளாளர் பதவியை பறிப்பது குறித்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க