இலங்கை தொடரூந்து சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இது வரையில் எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெட்டிகளும், எஞ்சின்களும் இந்திய நிதி உதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இந்திய நிதி உதவியின் கீழ் எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் மூன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இவ்வாறான எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் இரண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
கருத்து தெரிவிக்க