ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்று அமைக்கப்படவிருக்கும் தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அந்தக்கட்சியின் தவிசாளர் தெரிவிக்கின்றார்.
கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே கட்சியின் தவிசாளர் அதி;ர்ச்சி தரும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்கள் மூலமே தெரிந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது விடயம் குறித்து ஹாசிமுடன் தனிப்பட்ட ரீதியில் பேசப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றவேண்டுமானால் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக்கப்படவேண்டும் என்று கபீர் ஹாசிம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க