உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

சிறுபோக உற்பத்தியில் பாதிக்கப்பட்டோருக்கு 55 கோடி இழப்பீடு

2018 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 55 கோடி ரூபா இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தியவர நேயோ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நுவரவெவ பஸவான் குளம், திஸாவெவ உள்ளிட்ட விவசாய அபிவிருத்தி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்

இழப்பீடு வழங்கும் வேலைத்தித்திட்டங்கள் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அநுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் 2750 விவசாயிகளுக்கு 7.5 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு சிறுபோகத்தின் போது ஏற்பட்ட வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தத்தினால் நாடு முழுவதிலும் 23,605 ஏக்கர் உற்பத்தி நிலம் பாதிக்கப்பட்டிருந்தது.

20,113 விவசாயிகளுக்காக 556 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை நாம் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளோம்.

ஒரு ஏக்கருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை 40,000 ரூபாவாகும். இத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட உற்பத்திக்காக வழங்கப்படும் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க