உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தெரிவுக்குழு அமர்வு நாளை மறுதினம் – இறுதி அறிக்கை அடுத்த மாதம்!

அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் நாளை மறுதினம் (24) நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு வரும் 24ஆம் பிற்பகல் நாடாளுமன்றக் கட்டத் தொகுதியிலுள்ள குழு அறையில் நடைபெறவுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளரான சானி அபேசேகர, குற்ற விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்ன, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர, பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் தரங்க பத்திரன ஆகியோருக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

விசாரணைகளில் பெரும்பாலும் ஊடகங்கள் அனுமதிக்கப்படாது என்றும், எனினும், ஊடகங்களுக்கு ஒலிப்பதிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்தமாதம் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க