உடலை மெலிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். இதனால் நிச்சயமாக ஆரோக்கிய குறைபாட்டுக்குத் தான் ஆளாக நேரிடும். உயரத்திற்கு ஏற்ப இல்லாமல் உடலின் நிறை அதிகரித்து இருந்தால் மட்டும் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கலாம்.
கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகளை தவிர்த்து, பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு உள்ள உணவு வகைகளை குறைக்க வேண்டும். உணவில் சம அளவான சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும். புரோட்டின் , மாச்சத்து உள்ள உணவு வகைகளை அளவோடு சாப்பிடுவது நல்லது.
அன்றாடம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில் சிறிது தூரம் நடப்பதை வழக்கமாக்கி கொண்டால் மிகவும் நல்லது.
ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையே 4 மணித்தியால இடைவெளி இருக்க வேண்டும். முக்கியமாக இரவு உணவிற்கு பின்னர் ஒன்றரை மணித்தியாலம் கழித்து நித்திரை கொள்வது நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் தேநீருடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
குளிர்ந்த நீரைக் குடிப்பதை தவிர்த்து சூடான நீரைப் பருகி வந்தாலும் உடலில் உள்ள சதை குறையும்.
உணவில் அடிக்கடி கொள்ளு சேர்க்க வேண்டும். காலையில் நீராவியில் அவித்த காய்கறிகள் சாப்பிடுவது நல்லது.
கருத்து தெரிவிக்க