கி.மு 2000 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வந்து விட்ட பச்சைப் பட்டாணியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மாமிச உணவுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தும் போது, உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்கும்.
பச்சைப் பட்டாணியில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், விற்றமின் ஏ, பி, சி, நார்ச்சத்துகள், போன்றன நிறைந்து காணப்படுகின்றன.
இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிலிருந்து எம்மை காக்கும். அதுமட்டும் அல்லாமல் இளமையாக, ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகின்றது.
மேலும் கண் பார்வைக்கு இன்றியமையாத விற்றமின் ஏ இதில் நிறைந்துள்ளது. தலைவலி , உடல் வலிகள் ஏற்படாமல் தடுக்கும். பல், எலும்பு முதலியவற்றை உறுதியடையச் செய்யும். வாய்ப்புண்களை குணமாக்கும். செரிமான உறுப்புகளை நன்கு செயற்பட வைக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 3 தேக்கரண்டி பட்டாணியை உணவோடு கொடுத்து வந்தால், ஞாபக சக்தியும் புத்திக்கூர்மையும் அதிகரிக்கும்.
உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் அதிகளவு பட்டாணியை சேர்த்துக் கொண்டால் சதைப்பிடிப்பு ஏற்படும்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 கிராம் பச்சைப் பட்டாணி கொடுத்து வர மனநோய் குணமாகும். மேலும் நுரையீரல் சம்பந்தமான நோய்களையும் தடுக்கும்.
கருத்து தெரிவிக்க