உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்க உலக வங்கி உறுதி

உலக வங்கி தனது மூன்று புதிய நடவடிக்கைகளின் கீழ் இலங்கைக்கு உதவிகளை அதிகரிக்கும் என தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கி துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் (Hartwig Schafer) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளும் விவசாயத் துறைக்கு உதவுதல், நீர்ப்பாசனம், சக்தியை புதுப்பித்தல், காலநிலை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை இன்று (ஜூலை 18) சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் அது பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், உலக வங்கி வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைக்க நிதி உதவி வழங்கும் என்றும், இதன் மூலம் சிறந்த பொருளாதார அடித்தளத்துடன் சர்வதேச கடன்களை செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  நீண்டகாலமாக இலங்கைக்கு  நிதியுதவி செய்ததற்காக உலக வங்கிக்கு ஜனாதிபதி தனது நன்றியை  தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் உலக வங்கி வழங்கிய ஆதரவு குறித்து ஜனாதிபதி விசேடமாக அறிக்கையிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க