உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பூஜித், ஹேமசிறி பிணை: மீண்டும் விசாரணைக்கு வருகிறது மனு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் மீது தலைமை நீதவான் அளித்த தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் முன் வைத்த திருத்தப்பட்ட மனு ஜூலை 23 ம் திகதி உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு செயலாளருமான நிஷார ஜெயரத்ன, இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க தலைமை நீதவான் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இன்று (ஜூலை 18) திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக சட்டமா அதிபரின்அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பிணை வழங்கினார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கையில் சந்தேக நபர்கள் மீது எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால், நீதவான் சுட்டிக்காட்டியபடி, ஒரு சட்டபூர்வ அறிக்கையைப் பெற்ற பின்னர் சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டிய தேவை இல்லை என சட்டமா அதிபரின் திருத்தப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை நீதவான் தனது தீர்ப்பில், சந்தேக நபர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களின் அலட்சியம் உயிர் இழப்புக்கு வழிவகுத்தது என குறிப்பிட்ட சட்டமா அதிபர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294 (4) இன் கீழ் இதைப் பயன்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க