மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையை மேம்படுத்தும் நோக்கில் IRCON இன்டநெஷனல் லிமிடெட் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
91.26 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்படும் குறித்த திட்டம் மூலம் 130 கி.மீ தூரம் புனரமைக்கப்படவுள்ளது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பாதை 100 ஆண்டுகளில் புனரமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த திட்டம் மூலம் தொடருந்து பாதையின் வேக திறனை தற்போதைய மணிக்கு 60 கிமீ வேகத்தில் இருந்து 120 கிமீ வரை இரட்டிப்பாக்குவதோடு, பராமரிப்பு செலவுகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பயணிகளுக்கான சௌகரியத்தை மேம்படுத்துவும், இலங்கை தொடருந்து துறையின் நவீனமயமாக்கலுக்கும் பங்களிப்பு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க