உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காவல்துறையினரின் வாகனங்கள் மீது குற்றம் சுமத்தும் தயாசிறி ஜயசேகர

இல் இலங்கையில் ஏற்படும் அதிக விபத்துகளுக்கு காவல்துறையினரின் வாகனங்கள் காரணமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

காவல்துறையினரின் பெரும்பாலான வாகனங்கள் உரிய முறையில் ஆவணங்களை கொண்டிருக்கவில்லை அதாவது பாதையில் செல்லக் கூடிய வகையிலான ஆவணங்கள், காப்புறுதி என்பவற்றை கொண்டிருக்கவில்லை.

எனவே அவ்வாறான வாகனங்களில் பயணிகள் மோதுகின்ற போது குறித்த விபத்தில் இறக்கின்ற போது அவர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதில் பிரச்சினைகளை ஏற்படுவதாகும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த வாகனங்களை ஓட்டிச் செல்லும் சாதாரண காவல்துறையினரே பாதிக்கப்படுவதாகவும், இந்த விபத்துக்கான நட்டஈடுகளையும் அவர்களே செலுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

காவல்துறையினர் வசம் மிகவும் பெருமை வாய்ந்த உந்துருளிகள் இருக்கின்றன. அவற்றுக்கு எந்தவிதமான உரிய ஆவணங்களும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அடுத்தவர்களின் வாகனங்களை பரிசோதிக்கும் காவல்துறையினர் தமது வாகனங்களுக்கும் உரிய பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க