உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் ‘முழு நிலா’ கலைவிழா நிகழ்வு

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடாத்தும் முழு நிலா கலைவிழா இன்று சேமமடு சன்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையை சேர்ந்த மாணவ, மாணவிகளின் நடனம், பாடல்கள், நாட்டுக்கூத்து போன்ற பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் பிரதம விருந்தினர்களினால் மாணவர்களிற்கான பரிசல்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்கழகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க