ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் ஜூலை 11 முதல் 16 வரை இலங்கை அதிகாரிகளுடன் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சின் செயலாளர் அஹமட் ஜாவார்ட் தலைமையில் நடைபெறும் குறித்த கலந்துரையாடலில் தீவிரமயமாக்கல், தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் பேசப்படுகின்றன.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க முறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில் தகவல், நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை இரு தரப்பினரும் பகிர்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவின் வேண்டுகோளின் பேரில் ஒருங்கிணைப்பாளர் கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் செய்ததாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நான்கு பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளையும் சந்தித்துள்ளது.
கருத்து தெரிவிக்க