பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த கும்பல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்திய போது அதனைத் தடுக்க முற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.
இதனையடுத்து, வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிகளை இடை நிறுத்தி வைத்தியசாலை முன் இன்று காலை 10 மணி முதல் இரண்டு மணிநேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கருத்து தெரிவிக்க