சினிமா

கமலின் வசூல்ராஜா படத்தினை ஞாபகப்படுத்தும் ஆரவ்வின் “மார்க்கெட் ராஜா”

ஆரவ் நடித்துள்ள “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்” படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றிருந்த காட்சிகள் வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தை நினைவுபடுத்துவதாய் இருந்தது. வசூல் ராஜா எம் பி பி எஸ் என்ற வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் சரணே ஆரவ்வை வைத்து இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆரவ்வுடன் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சயாஜி ஷிண்டே ஆ‌கியோ‌ர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சண்டை காட்சிகள், ரொமான்ஸ் மற்றும் காமெடி என எல்லாவற்றிலும் அசத்தி இருக்கிறார் ஆரவ். ஏற்கனவே தமிழில் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்த போதும் “ராஜாபீமா” என்ற படத்திலேயே முதன் முதலாக நாயகனாக அறிமுகமாயிருந்தார். எனினும்  அப்படம் வெளி வர முதல் மார்கெட் ராஜா எம் பி பி எஸ் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க