உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மஹிந்த ஆட்சி நிலைத்திருந்தால் நாட்டில் பொருளாதார தடை ஏற்பட்டிருக்கும் – கிரியெல்ல

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் அமைத்திருந்தால் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பொருளாதார தடை வந்திருக்கும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2015ம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை.

அதற்கு முகங்கொடுக்க முடியாமையால் இரண்டு வருடங்கள் எஞ்சி இருந்த நிலையில் அவசர அவசரமாக தேர்தலுக்கு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள். இன்று ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். அதற்காக அவர்கள் பல போராட்டங்களையும் நடத்துகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1200 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க