ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டுவர வேண்டியது அவசியமென பாராளமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
ஆனாலும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரம் இதனைக் கொண்டுவரக்கூடாது.
மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப் பிரேரணை தயாரிக்கப்படுமாயின் அதற்காக 75 பேரின் கையொப்பங்களை திரட்டித் தருவதற்கு தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க