இலங்கையில் தொடர்ந்தும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தனிப்பட்ட தாக்குதல்களை மேற் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்திருக்கின்றார்.
அடிப்படைவாதிகளான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கையில் மாத்திரம் அல்லாது பல்வேறு இடங்களிலும் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி இருப்பதை அவர் நினைவு கூறினார்.
மேலும் சஹ்ரான் குழுவினர் பலர் அழிக்கபட்டதோடு மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் குறித்த குழுவை சார்ந்த இன்னும் சிலர் தனித்த நிலையில் இலங்கையில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.
அவர்கள் எந்த நேரத்திலும் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது என்றாலும் பாதுகாப்பு படை மிகவும் அவதானமாக இருக்கின்றது எந்த ஒரு தாக்குதலையும் முறியடிப்பதற்கு என்ற விடயத்தை ருவான் விஜேவர்த்தன தெரிவித்திருக்கின்றார்
இதற்காக தாக்குதல் இடம்பெறும் என்ற தகவலை தான் விடுக்கவில்லை என்று கூறிய அவர் ஏனைய நாடுகளில் இவ்வாறான தனிப்பட்ட தாக்குதல்கள் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற் கொள்வார்கள் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் இதனை தெரிவித்தேன் என மேலும் கூறியுள்ளார் .
இலங்கையிலும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் கூட பாதுகாப்பு படையினர் மிகவும் அவதானமாக இருக்கின்றார்கள் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை நாட்டில் பாதுகாப்பு நிலைமை உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க