உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முஸ்லீம் பெண்களுக்கான புதிய தீர்மானம்

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையினை 18ஆக நிர்ணயிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை தீர்மானித்தனர்.

அத்துடன் காதி நீதிபதிகளாக பெண்களை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடக்கத்தது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதற்காக தபால் சேவைகள் மற்றம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எம். முஹம்மத் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அஷ்ரப் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே மேற்குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் காரணமாகவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையிலே நேற்றைய கூட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக விரைவில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க