உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க திட்டம்

இந்தியாவில் இருந்து மின்சார விநியோகத்தை இலங்கைக்கு பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒரு திட்டம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம் பெறுகின்றன.

கடந்த 24ம் திகதி புது டெல்லியில் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கின்றன.

இலங்கையில் மின்சார தட்டுப்பாடு இடம்பெறுகின்ற வேளையிலே இந்தியாவிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரு அடிப்படை நடவடிக்கையே இதன் மூலம் செயற்படவிருக்கின்றது.

இதன் மூலம் மதுரையில் இருக்கின்ற உப மின்சார நிலையத்திலிருந்து கடலுக்கடியில் கேபல்கள் அமைத்து அதனூடாக அனுராதபுரத்தில் இருக்கின்ற மின்சார நிலையத்துக்கு இந்த மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த செயற்பாடுகளுக்கான நிதியுதவியை வழங்க விருக்கின்றது.

இதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் ஏற்கனவே நிறைவு பெற்றிருக்கின்றன .

இந்த அடிப்படையில் இலங்கையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுகின்ற வேலை மாத்திரம் இந்தியாவிலிருந்து மின்சாரத்தை பெற்று கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கபடும் என மின்சார சபை தெரிகிவித்திருக்கின்றது.

இந்த திட்டத்தின் போது எந்த வீதத்திலான மின்சாரத்தை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற விடயம் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

தற்போதைக்கு இந்தியாவிலிருந்து இந்த மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதேபோல அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இது தொடர்பான உடன்பாடு விரைவில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க