சினிமா

அமலாபாலின் ஆடை படத்தில் பக்தி பாடல் பாடிய பி. சுசிலா!

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆடை. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தில் பாடகி பி. சுசிலா பக்தி பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இயக்குனர் ரத்னகுமார் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பாடலும் விரைவில் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ரத்னகுமார், பி. சுசிலாவின் பக்தி பாடல் பதிவு செய்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இப்படத்தில் பி. சுசிலா பாடியுள்ளது கடவுளிடமிருந்து கிடைத்துள்ள உண்மையான ஆசிர்வாதம் எனவும் 70 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படியானதொரு பாடலை முதன்முறையாக பி.சுசிலா பாடியுள்ளார் எனவும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க