அழகு / ஆரோக்கியம்

சில மூலிகை வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்

வில்வம்

காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்திபேதி போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வம் இலை செயற்படுகிறது.

அறுகம்புல்

எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து. உடல் எடை குறைவதற்கும், கொலஸ்ரோல் குறைவதற்கும் உதவும். நரம்புத் தளர்ச்சி நீங்கவும், இரத்தப் புற்றுநோய் , தோல் நோய்கள் போன்றவற்றை குணமாக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கும்.

பாகற்காய்

கல்லீரலை பாதுகாக்கும். நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மணத்தக்காளி

குடற்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், குணமாகும். மெலிந்த உடலைக் கொண்டவர்களுக்கு சிறந்த மருந்து.

தொட்டாற்சுருங்கி

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை காந்த சக்தி உடையது என்று சித்தர்களும் தெரிவித்துள்ளனர். குழந்தை பேறு, ஆண்மைக் குறைபாடு, தோல் வியாதிகள் போன்றவற்றுக்கும் சிறந்தது.

செம்பருத்தி பூ

அனைத்து வகையான இதய நோய்களுக்கும் சிறந்தது. வயிற்றுவலி, வயிற்றோட்டம், போன்றவற்றை குணப்படுத்தும்.

கருத்து தெரிவிக்க