உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எரிபொருள் விலைகளில் திருத்தங்கள்- நிதியமைச்சு

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை மீளாய்வு நடவடிக்கை படி இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் மேற்கொண்டு வரப்படவுள்ளன.

அதன்படி ஒக்டைன் 92 பெற்றோலின் விலை லீட்டர் ஒன்றுக்கு 2 ரூபாவினாலும்,  ஒக்டைன் 95 பெற்றோலின் விலை லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாவினாலும், சூப்பர் டீசல் பெற்றோலின் விலை ஒரு லீட்டருக்கு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

மேலும் புதிய விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி புதிய விலைகளாக ஒக்டைன் 92 பெற்றோலின் விலை லீட்டர் ஒன்றுக்கு 136 ஆகவும்,  ஒக்டைன் 95 பெட்ரோலின் விலை லீட்டர் ஒன்றுக்கு 159 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 131 ரூபாவாகவும் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க