இலங்கை மின்சார சபையானது அனல் மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்துடன் இணைந்து கடன் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியம் கூட்டுத் தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 80 பில்லியன் ரூபாவினை இலங்கை மின்சார சபையானது செலுத்த தவறியதன் காரணமாக மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை பெற்றோலியம் கூட்டுத் தாபனம் நிறுத்தியது.
இதனால் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டுக்குள்ளானது.
இந் நிலையிலேயே நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையினை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுலக்ஷனா ஜெவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க