வயிற்றினைச் சுற்றி சதை வளர்வதற்கான காரணங்கள் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. இப்படி உடல் அழகை கெடுக்கும் தொப்பையை குறைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் தேவையான அளவு உடற் பயிற்சி செய்வதன் மூலம் உடலின் எடையை குறைப்பதுடன், வயிற்றைச் சுற்றி இருக்கும் சதைகளையும் குறைக்கலாம்.
உணவில் அதிகளவு உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 2 லீற்றர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
தொப்பை ஏற்படுவதற்கு சீனியும் ஒரு காரணம். எனவே உணவில் சீனிக்குப் பதிலாக தேனைச் சேர்த்துக் கொள்ளலாம். தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது.
ஒவ்வொரு நாளும் காலையில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகி வந்தாலும் தொப்பை குறையும். அதேபோல் காலையில் வெறும் வயிற்றில் பூண்டின் ஒரு பல் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடன் பலன் கிடைக்கும். பூண்டில் கொழுப்பை குறைக்கும் தன்மை நிறைய உண்டு.
நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகளவு உள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்து வந்தாலும் வயிற்றைச் சுற்றி உள்ள சதையும் குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
கருத்து தெரிவிக்க