சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் 39 நாடுகளுக்கு வருகைத்தரு வீசா(visa-on-arrival) முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது.
இது கடந்த மே முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவிருந்தபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பிற்போடப்பட்டது.
இந்தநிலையில் ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோசியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி,லத்தீவீயா, லித்துவேனியா,லக்சம்பேக், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியே, சுலோவேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய ராச்சியம்,அமரிக்கா. ஜப்பான் அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா,தாய்லாந்து, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கான வருகைத்தரு வீசா வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க