பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமொன்றை இங்கிலாந்திற்கு மேற்கொண்டிருப்பதன் காரணமாகவே, பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பயணத்திற்கு முன்னர் ஜனாதிபதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் பாதுகாப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியதாகவும் அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று காலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க