உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஏனைய மதங்களைப் பற்றிய பாடங்களை பாடசாலைகளில் கற்பிக்கவேண்டும்

ஏனைய மதங்களைப் பற்றிய பாடங்களை பாடசாலைகளில் கற்பிப்பதனூடாக மதரீதியான புரிந்துணர்வை மாணவரிடையே ஏற்படுத்தலாம்.

ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஏனைய மதங்களைப் பற்றி கற்பிக்கின்றபோது மதங்களைப் பற்றிய புரிதல்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முடியும்.

இதனூடாக ஏனைய மதங்களை சிறிய வயதிலேயேயே அறிந்து கொள்ளுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.

வாழைச்சேனையில் இடம்பெற்ற வைபவமொன்றில் பேசிய முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,  இந்து பாடசாலைகளில் இஸ்லாத்தைப் போதிக்க வேண்டும் இஸ்லாமிய பாடசாலைகளில் இந்து மதத்தை கற்பிக்க வேண்டும்.

பௌத்த பாடசாலைகளில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய பாடசாலைகளில் பௌத்த மதத்தையும் கற்பிக்க வேண்டும் கத்தோலிக் மதத்தை ஏனைய மத பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே போல் பௌத்த இந்து கத்தோலிக்க இஸ்லாமிய மதங்களின் வேத நூல்கள் பற்றிய அறிவையும் அந்த மதத்தைச் சேராத ஏனைய மத மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே தெளிவுபடுத்த வேண்டும்.

ஓவ்வொரு மதமும் போதிக்கின்ற நல்ல சிந்தனைகள் அடுத்த மதத்தவரிடம் போய்ச்சேர்ந்தால் மதங்களின் மீதுள்ள தப்பான எண்ணப்பாடுகள் நீங்கும்.

இவ்வாறு ஒப்பீட்டு மதங்கள் தொடப்பான பாடங்கள் பாடவிதானங்களில் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு பரீட்சைகளிலும் இணைக்கப்பட்டு நேர்முகத்தேர்வுகளின்போது அந்தப்பரீடசைப் புள்ளிகளுக்கு மேலதிக புள்ளிகள் வழங்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் அமைதிமிக்க இலங்கையை கட்டியெழுப்ப மதங்களிடையேயான தப்பான எண்ணங்கள் களையப்பட்டு மாணவர்களின் உள்ளங்களில் மதங்களின் மீதான நம்பிக்கைககள் வளரச் செய்யப்பட வேண்டும் என்றார்.

கருத்து தெரிவிக்க