அழகு / ஆரோக்கியம்

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகாக்கும் சில குறிப்புகள்

முகத்தை வெள்ளையாக்குவதற்கு

1. முல்தானிமெட்டி, தோடம்பழத் தோலின் தூள், தயிர் இவை மூன்றையும் கலந்து பசையாக்கவும். பின்னர் முகத்தை நன்றாக கழுவியதும் இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து 5 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

2. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து இறக்கிய பின், ரோஜா பூவின் இதழ்களை அதனுள் போட்டு ஊற வைக்கவும். பின்னர் கற்றாழை ஜெல்லையும் ஊற வைத்த ரோஜா இதழ்களையும் சேர்த்து அரைத்து ஒரு போத்தலில் போட்டு வைக்கவும். அந்த நீரை முகத்தில் பூசி காய வைக்கவும்.

3. அதிமதுர தூள் , கஸ்தூரி மஞ்சள், தேன் மூன்றையும் கலந்து கலவையாக்கி முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இந்த பேசியலை சாதாரணமாக நாம் வேலைக்கு செல்லும் போது செய்யலாம்.

வீட்டில் செய்யக் கூடிய கோல்ட் பேசியல்

1. காய்ச்சாத பசும்பால் 3 தேக்கரண்டி எடுத்து சிறு பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

2. சீனி ஒரு தேக்கரண்டி, மூன்று துளிகள் எலுமிச்சை சாறு, தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் செய்த பின் கழுவவும்.

3. தண்ணீரை கொதிக்க வைத்து முகத்திற்கு 10 நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின்னர் பஞ்சினால் துடைத்து விடவும்.

4. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி, தயிர் ஒரு தேக்கரண்டி, தேன் சிறிதளவு , கஸ்தூரி மஞ்சள் அரை தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு மூன்று சொட்டுகள் , இவற்றை எல்லாம் சேர்த்து கலந்து அந்த பசையை முகத்தில் பூசி 25 நிமிடங்கள் காய விடவும். பின்னர் கழுவி விடலாம்.

கருத்து தெரிவிக்க