உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் தொங்கு பாலத்தில் பயணிக்க மக்கள் அச்சம்

மன்னார் தொங்குபாலத்தில் பயணிப்பவர்கள் அச்ச நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.
அங்கு பாதுகாவலர்கள் இன்றிக்காணப்படுவதால் செல்லும் சுற்றுலாப்பணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் தொங்கு பாலம் பல வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது.
மன்னாருக்கு பல்வேறு வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்லும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சுற்றுலாப்பயணிகள் தமது குடும்பத்தினருடன் தொங்குபாலத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளைப்பார்வையிட்டு வருகின்றனர்.
தொங்கு பால நடை பாதையில் அமைக்கப்பட்ட தகட்டின் ஒரு பகுதி திறந்து  காணப்படுகின்றது.
இதனால் அப்பாலத்தைக்கடந்து செல்லும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாலத்தில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அழிந்து செல்லும் பிரபல்யமான சுற்றுலா மையங்களை அழகுபடுத்தி மாகாணத்தை வருமானதுறையாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுற்றுலாப்பயணிகள் தெரிவிர்த்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க