அழகு / ஆரோக்கியம்

பெண்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள்

அன்றாட உணவில் அதிகளவு கோவா சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அத்துடன் அடிக்கடி அப்பிள் சாப்பிட்டு வந்தாலும் புற்றுநோயைத் தடுக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் இரும்புச் சத்துள்ள குளிசைகளை குடிப்பதனால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்ற பயத்தில் அனேகம் பேர் அதனைத் தவிர்த்து விடுகின்றனர். அது தேவையற்ற பயம். கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து மிகவும் அவசியம்.

கர்ப்பிணிப் பெண்கள் காலையில் நேரத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் வராது.

வயிற்றில் குழந்தை வளர வளர தேவையான அளவு சாப்பிட இயலாமல் இருக்கும். அந்த நேரங்களில் இயற்கை குளிர் பானங்கள்,முளை கட்டிய தானிய வகைகளை சாப்பிடலாம்.

குழந்தைப் பேறு காலத்திற்கு பின்னர் வயிற்றின் தசைகள் வலுவடைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி பனங்கற்கண்டுடன் சாப்பிடக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.

பெண்களின் வயிற்றுச் சதை குறைய, சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்றாக அரைத்து காலையும் மாலையும் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர அடிவயிற்றின் சதை குறையும்.

தாய்ப்பால் சுரக்காத பெண்கள் அதிமதுரத்தை தூளாக்கி அதில் அரைத் தேக்கரண்டி எடுத்து பாலோடு கலந்து சிறிதளவு சீனியும் சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.

கருத்து தெரிவிக்க