இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சீவா, லாவோஸ், வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு திறந்து கொடுக்கப்படுமாக இருந்தால், அந்த மாகாணத்தை மேல் மாகாணத்தை விடவும் அதிவிரைவில் அபிவிருத்தி செய்யலாம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற தேசத்துக்கான பாதை எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது இலங்கையில் கிழக்கு மாகாணம், திருகோணமலை, மட்டக்களப்பு வலயம் என்பவற்றை விஞ்ஞான ரீதியில் திட்டமிட்டு வெளிநாடுகளுக்கு திறந்து கொடுக்கப்படுமாக இருந்தால் பாரிய பொருளாதார வளர்ச்சியொன்றைக் காணலாம் என மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க