சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு முக்கிய சந்தேக நபரை கைது செய்ய உள்ளனர் என பிரதான ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் தென்னகோனின் வாகனத்தில் கிடைத்த கைரேகைகள் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியுடன் ஒத்து போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா திணைக்கள ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் அதிகாரியான லலித் ராஜபக்ஷவின் கைரேகை வாகனத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றுடன் ஒத்து காணப்படுகிறது.
குறித்த வாகனத்தில் தனது கைரேகை எவ்வாறு வந்தது என்பது குறித்து சந்தேக நபரிடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த குற்றப்புலனாய்வு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் தென்னகோன் 23 ஜனவரி 2009 அன்று இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது அவரது மனைவியும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க