முகப்பரு நீங்குவதற்கு சிறுதுண்டு இஞ்சியை அரைத்து சாறு பிழிந்து ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்கவும். ஒரு மணித்தியாலம் கழித்து நீரை வடித்து எடுத்து விட்டு, அடியில் உள்ள பசையை எடுத்து பரு உள்ள இடத்தில் பூசி வந்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.
துளசி இலையும் முருங்கை வேரும் சேர்த்து அரைத்து முகம் கை கால் என உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் கருமையான சருமம் வெள்ளையாக மாறும்.
முகத்தில் உள்ள தேமல் மறைய சாதிக் காயை இரவில் ஊறவைத்து காலையில் அதனை உரசி தேமல் உள்ள இடத்தில் பூசலாம். அதேபோல் பூவரசங்காயையும் உரசிப் பூசினால் தேமல் மறையும்.
கரும்புள்ளிகள் மறைவதற்கு வேப்பங்கொழுந்துடன் கசகசாவை சேர்த்து அரைத்து பூசினால் மறைந்து விடும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் மற்றும் முகத்தில் வெடிப்புகள் தோன்றும். அவற்றுக்கு வாழைப் பழத்தை தேனுடன் பிசைந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெயிலால் ஏற்படும் கருமையை போக்க அவரை இலையை அரைத்து முகத்தில் பூசி ஒரு மணித்தியாலம் கழித்து கழுவினால் முகம் பளிச்சிடும். அத்துடன் பப்பாசிப்பழம் தேன், அறுகம்புல் சாறு மூன்றையும் கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவடையும்.
கருத்து தெரிவிக்க