மியான்மாரின் பண்டைய தலைநகரான பகானை உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ இன்று (சனிக்கிழமை) அடையாளப்படுத்தியுள்ளது.
பகானின் புத்த கோவில்களின் வளாகத்தை உலகின் பாரம்பரிய தளமாக அறிவிக்க முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்த நிலையில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த தீர்மானமானது மத்திய மியான்மார் பகுதியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த வளாகத்தில் இதில் 3,500 க்கும் மேற்பட்ட ஸ்தூபங்கள், கோயில்கள், மடங்கள் மற்றும் 11 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட பிற கட்டமைப்புகள் உள்ளன.
இது மியான்மரின் சுற்றுலாத் துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கருத்து தெரிவிக்க