விளையாட்டு செய்திகள்

இந்திய வீரர் டோனியை கெளரவப்படுத்திய ஐசிசி

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை புகழ்ந்து ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் 3 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, தனது 38-வது பிறந்தநாளை நாளை 07-ம் திகதி கொண்டாடுகிறார்.  இந்நிலையில் டோனியைக் கெளரவப்படுத்தும் விதமாக காணொளி ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய டோனி என்கிற தலைப்பில்  வெளியிடப்பட்டுள்ள  குறித்த காணொளியில் டோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த காணொளியில் விராட் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் டோனியின் பங்களிப்பு குறித்து பாராட்டிப் பேசி உள்ளார்கள்.

2004 ம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த மகேந்திர சிங் டோனி 2007 ம் ஆண்டு தொடக்கம் 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த காலத்தில் இந்திய அணி பல கிண்ணங்களை வென்றுள்ளது.

கருத்து தெரிவிக்க