அழகு / ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கான சில சித்த மருத்துவ குறிப்புகள்

உடலில் உள்ள தழும்புகள் மறைய நீரில் கைப்பிடி அளவு துளசி இலையை போட்டு ஊற வைத்து குளித்து வந்தால் தழும்புகள் மறைந்துவிடும் விடும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் , காய்ச்சல் போன்றவற்றுக்கு அரை கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.

உடல் பருமனைக் குறைக்க காலையில் வெறும் வயிற்றில் 10 அல்லது 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வரவும். 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம் பூவை காயவைத்து தூளாக்கி தினமும் காலையில் நீருடன் கலந்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்குவதற்கு செல்வத்தை இலையை நிழலில் காயவைத்து தூளாக்கி மூன்று நாட்கள் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

உடலில் உள்ள தேமல் மறைவதற்கு வெள்ளைபூடும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்தால் மறைந்து விடும்.

சருமத்தில் உள்ள தொற்று கிருமிகளை நீக்குவதற்கு சவர்க்காரத்திற்கு
பதிலாக தோடம்பழத்தின் தோலை காய வைத்து தூளாக்கி அதனை தினமும் பூசி குளித்து வரலாம்.

கருத்து தெரிவிக்க