போதைப் பொருள் பாவனை தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக 1984 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர்.
போதைப் பொருள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பொலிஸ் தலைமையகம் விஷேட செயற்பாட்டு பகுதியை அமைத்திருந்தது.
இந்த நடவடிக்கைப் பிரிவில் உள்ள அதிகாரிகள் பொலிஸ் போதைப் பொருள் அலுவலகத்துக்கு உட்பட்ட அபாயகர ஒளடதக கட்டுப்பாட்டு சபையில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தகவல் செயற்பாட்டு பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டள்ளது.
இதன் காரணமாக புதிய 1984 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க