நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அவுஸ்திரேலியா செல்ல கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எம். பி கம்மன்பில சிட்னி ஜெயசிங்க என அடையாளம் காணப்பட்ட நபருடன் மோசடி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
1997 மற்றும் 2000 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலிய நாட்டினருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்குகளைஇலங்கையின் தொழிலதிபர் தம்மிக பெரேராவுக்கு விற்றபோது சந்தேக நபர்கள் ரூ .21 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரையன் ஹாடிக் என்பவர் குற்ற புலனாய்வு பணியகத்தில் கம்மன்பில மீது முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வழக்கு அக்டோபர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க