அழகு / ஆரோக்கியம்

தொட்டாற்சுருங்கியில் உள்ள மருத்துவ குணங்கள்.

தொட்டால் உடனே வாடி விடும் இயல்பு கொண்ட தொட்டாற்சுருங்கி தாவரத்தின் முழுப்பாகங்களும் மருத்துவ குணங்கள் அடங்கியது. பரந்து விரிந்து வளரக்கூடிய சிறுகொடி வகையைச் சேர்ந்தது. சிறு முட்களும் காணப்படும். இந்த தொட்டாற்சுருங்கி தாவரத்தின் மருத்துவ இயல்புகள் பற்றி பார்க்கலாம்.

தொட்டாற்சுருங்கி முழுத் தாவரத்தையும் வெயிலில் காய வைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். காலையில் ஒரு தேக்கரண்டி எடுத்து சுடுநீரில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.

வெட்டுக் காயங்களுக்கு முழுத் தாவரத்தையும் இடித்து சாறு பிழிந்து காயத்தின் மீது பூசி வரவும். தினமும் காலையிலும் மாலையிலும் பூசி வர காயம் வெகு விரைவில் குணமாகும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப் போக்கை கட்டுப்படுத்த தாவரத்தின் சாறு 4 தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து குடிக்க வேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலையுடன் வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்து ஒரு எலுமிச்சம் பழம் அளவு சாப்பிட வேண்டும்.

கை கால்களில் ஏற்படும் மூட்டு வலிகளுக்கு இலையை அரைத்து விழுதாக்கி வலியுள்ள இடத்தில் பூச வேண்டும்.

ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தடிப்புகள், சிரங்குகள் போன்றவற்றுக்கு இலையை அரைத்து பூச வேண்டும்.

முழுத் தாவரத்தையும் இடித்து 2 தேக்கரண்டி சாறில் தேன் கலந்து குடிக்க மூல நோய் , வாதங்கள் குணமாகும்.

கருத்து தெரிவிக்க