நீண்ட அடர்த்தியான அழகான கூந்தலை பெற எல்லாப் பெண்களுக்கும் ஆசை தான். உரிய வழிமுறைகளை கையாண்டு வந்தாலே அழகான கூந்தலை பெறலாம்.
தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கு நெல்லிக்காய். கடுக்காய் இரண்டினையும் தூளாக்கி தேவையான அளவு எடுத்து, இரவில் நீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். பின்னர் காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.
குன்றிமணிகளை தூளாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நின்று விடும்.
உணவில் அடிக்கடி நெல்லிக்காயை சேர்த்து வந்தால் இளநரை நீங்கி முடி கருமையாக மாறி விடும்.
செம்பட்டை முடி மாறவும், அடர்த்தியாக வளரவும் செம்பருத்தி இலை, பூ, நீலப் பூ கொடி இலை போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம்.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் துளசி, கீழ்க் காய் நெல்லி இலை, கற்றாழை, குப்பை மேனி இலை, நெல்லிக்காய். வேப்பம் இலை. நீலப் பூக்கொடி இலை போன்றவற்றை நன்றாக அரைத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயயை தலையில் தேய்த்து வந்தால் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் நல்லது.
கருத்து தெரிவிக்க