நாட்டில் தற்போது பாரிய அளவில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன தலைதூக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும் என தெரிவித்துள்ளார்.
இனவாதம், அடிப்படை வாதம் என்பவற்றிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒரே தேசியம் என்ற அடிப்படையில் ஒரு சக்தியை முன் எடுக்கவேண்டும்.
மகிந்த என்பவருக்கு பதிலாக எவர் வந்தாலும் பழைய கதைதான் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
இனவாதம் அடிப்படை வாதம் என்பவற்றிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தயாரித்துள்ள முன்யோசனைகள் கொண்ட தொகுப்பை மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள அவர்களுக்கு கையளிக்க வருகை தந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இடதுசாரி முற்சிந்தனை கொண்ட ஜனநாயக மக்கள் மத்திய நிலையம் ஒன்றினூடாக மக்கள் விடுதலை முன்னணி அடுத்த ஜனாதிபதிப் பொதுத் தேர்தலில் ஒரு அபேட்சகரை களம் இறக்கும் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க