பயணிகளை விரைவாக நகர்த்தும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின் வாயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி விமான நிலையத்தில் சுமார் நான்கு மின் வாயில் (இ-கேட்) இயந்திரங்கள் நிறுவப்படும் எனவும் இந்த அமைப்புகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் தங்கள் கடவுசீட்டை மின் வாயில் இயந்திரத்தில் (இ-கேட் மெஷினில்) ஸ்கேன் செய்ய வேண்டும், அந்த இயந்திரம் இன்டர்போல் தரவுத்தளத்துடன் இணைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
இது பயணிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு உதவும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க