பாதுகாப்பு கடவை அமைத்த தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 7 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடரூந்து கடவையில் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 27ம் திகதி இடம்பெற்ற விபத்தின் போது படையினர் 6பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்த குறித்த பாதையை பாதுகாப்பான கடவையாக மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித் போராட்டம் காரணமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தொடரூந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தை தொடர வேண்டி நிலை ஏற்பட்டிருந்தது.
மேலும் மின்னால் இயங்கும் பாதுகாப்பு கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் புதையிரத திணைக்கள அதிகாரிகள் கூறியதன் பின்னர் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பின்னர் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பின.
குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதியிலேயே கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து தெரிவிக்க